Friday, September 10, 2010 3:20 AM IST
Click
திருச்சி
"நீண்டநாள் வாழ நகைச்சுவை உணர்வு உதவும்'

First Published : 30 Jul 2010 11:26:20 AM IST


    

தஞ்சாவூர், ஜூலை 29: நீண்டநாள் வாழ நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் மருத்துவர் சு. நரேந்திரன்.

  தஞ்சாவூர் நகைச்சுவை மாமன்றம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாதாந்திரந்க் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

 மனம் விட்டு சிரிக்கப் பழகுங்கள். அதனால் மாரடைப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவை வராமலும், வந்த நோய்களின் பாதிப்பைக் குறைத்தும் வாழலாம் என்றார் அவர். கும்பகோணம் சி. இளஞ்சேரன் சிரிப்போம் சிந்திப்போம் என்ற தலைப்பில் பேசினார்.

  நிகழ்ச்சியில் சிறந்த நகைச்சுவையாளர்களுக்கான முதல் பரிசு கோவில்வெண்ணி அஞ்சலை அம்மாள் பொறியியல் கல்லூரி மாணவர் வினோத், இரண்டாம் பரிசு திருச்சி லோகநாதன், மூன்றாம் பரிசு பள்ளித் தலைமை ஆசிரியர் இளங்கோ ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

  மன்றத்தின் இணைச் செயலராக ஜி. பாரதி தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலர் கோ. ஜெயக்குமார் வரவேற்றார். பேராசிரியர் ஜி. ஜான்பிரிட்டோ நன்றி கூறினார்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்